who is jeyalakshmi - யார் இந்த கா.ஜெயலக்ஷ்மி.... நாசா பயணம்

கா.ஜெயலக்ஷ்மி நாசா ISSC 2020 தேர்வு எழுதி நாசா செல்ல தேர்வு செய்யப்பட்டார்

who is jeyalakshmi - யார் இந்த கா.ஜெயலக்ஷ்மி.... நாசா பயணம்

யார் இந்த கா.ஜெயலக்ஷ்மி?...நாசா பயணம்

கா.ஜெயலக்ஷ்மி என்ற இந்த பெண் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஜெயலக்ஷ்மி புதுகோட்டை மாவட்டம் மாதன்னகோட்டையில் வசித்து வருகிறார்.ஜெயலட்சுமியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர்.ஆகையால் அவரின் தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார். ஜெயலட்சுமிக்கு ஒரே தம்பி அவன் 7ம் வகுப்பு படிக்கிறான். ஜெயலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்அந்த ஊரிலேயே முந்தரிபருப்பு சம்பந்தமாக வேலை செய்து வருகிறாள். அவரது சித்தப்பாவும் பெரிய உதவியாக இருக்கிறார்.

ஜெயலக்ஷ்மிக்கு சிறு வயது முதல் ஸ்பேஸ், ராக்கேட் சம்பந்தப்பட்ட படிப்புகளில் படிக்க அதிக ஆர்வம் கொண்டிருந்தாளர். ஆனால் அவளின் வறுமை நிலையின் காரணமாக தன்னால் படிக்க முடியாது என்று நினைத்து விட்டார். ஒரு நாள் தன் நண்பர்களுடன் கேரம்போர்ட் விளையாடிக்கொண்டிருக்கும் போது தண்ணீரில் ஏதோ பேப்பர் இருப்பதை பார்த்து அதை ஆர்வமுடன் எடுத்து படித்தார். அந்த பேப்பரில் ISSC  நாசா 2019 தேர்வில் மதுரையை சேர்ந்த தானிய என்ற பெண் தேர்ச்சி பெற்றிருப்பதையும் அந்த தேர்வு எப்படி எழுத வேண்டும் என்பது குறித்த தகவல் நிறைந்த கட்டுரை அதில் இருந்தது, அது மட்டும் அல்லாது அதில் ஒரு வேப்சைட்க்கான லிங்க்ம் கொடுக்கபட்டிருந்தது அதை வீட்டுக்கு எடுத்து சென்று தன் சித்தப்பாவின் போனை பயன்படுத்தி நாசா 2௦19 தேர்வு குறித்த விவரங்களை தெரிந்து  கொண்டார். ஒரே வாரத்தில் தேர்வு எழுதினார் ஜெயலக்ஷ்மி.அதில் அவர் அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அவள் முயற்சி குறித்து சொன்ன பொன்மொழி “ முயற்சி என்பது  விதை போல அதை விதத்து கொண்டே இருங்கள் அதை விதைத்தால் மரம் வளரும் இல்லை என்றால் அது மண்ணிற்கு உரம்”  .

ஜெயலக்ஷ்மி அமெரிக்கா செல்ல அவளுடைய பள்ளியின் தலைமை ஆசிரியர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ,அந்த மாவட்டத்தின் கலக்டர், என பல அமைப்புகள் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். அவரின் இந்த நாசா பயணம் நம் தாய் நாட்டிற்கு அப்துல்கலாம் போன்ற ஒரு விங்ஞானியை பெற்று தரும் என நம்புவோம், சென்று வென்று வா மகளே என்று வழி அனுப்புவோம்

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com