TVK விஜய் மாநாடு:
TVK விஜய் மாநாடு: "விட்றா வண்டிய..! தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் தேதியை அறிவித்தார் விஜய்..! எங்கு, எப்போது?"
Subscribe to Makkal Media | மக்கள் மீடியா :
TVK Vijay Manadu: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 27ம் தேதி, தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.
தவெக மாநாடு தேதி அறிவிப்பு:
இதுதொடர்பான அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகனை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Comments (0)