Bigg Boss Season 8: பரபரப்பான போட்டியாளர்கள்; கண்கள் நனைந்த தர்ஷா! - என்ன நடந்தது?

முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி மற்றும் பிறர் இதனை கிண்டல் செய்தனர்.

Bigg Boss Season 8: பரபரப்பான போட்டியாளர்கள்; கண்கள் நனைந்த தர்ஷா! - என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய (11-ம் நாள்) முதல் புரோமோ வெளியான நிலையில், இரண்டாவது புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தர்ஷா கண்கள் நனைத்துப் பேசியிருக்கிறார். 

 

நேற்று பிக் பாஸ் வீட்டில் தர்ஷா குப்தா சமைத்திருந்தார். அவர் உணவில் காரம் அதிகமாக சேர்த்துவிட்டார் என்றும், அதனால் பலருக்கு உடல் சிரமங்கள் ஏற்பட்டு விட்டதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி மற்றும் பிறர் இதை பரபரப்பாக்கியிருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் தர்ஷா குப்தா இதைப்பற்றி கண்கள் நனைத்து பேசியுள்ளார்.

அந்த புரோமோவில், "என்னை அனைவரும் சேர்ந்து காயப்படுத்திட்டே இருக்காங்க. இப்படி எல்லாம் நடக்கும் போது நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படிதான் செய்கிறார்கள். விளையாட்டுக்கு செய்ததாக இருந்தாலும், நான் ஒரு ஷோவில்(cwc)வில் அவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு வந்துருகிறேன், இப்போது இப்படி நீங்கள் பேசினால், வெளியே இருக்கும் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பாங்க" என பேசிருக்கிறார். அந்த ப்ரோமோ இங்கே!

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com