ஆழமாக நேசித்திருந்தாலும்... - ஏ.ஆர். ரஹ்மானுடன் தொடர்பான விவகார முடிவை அறிவித்த சாய்ரா பானு

29 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்தது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் சாய்ரா பானுவுக்கும் 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது

ஆழமாக நேசித்திருந்தாலும்... - ஏ.ஆர். ரஹ்மானுடன் தொடர்பான விவகார முடிவை அறிவித்த சாய்ரா பானு

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 29 வருடங்கள் நீண்ட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக, தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்துள்ளார் சாய்ரா பானு.

சாய்ரா பானுவின் வழக்கறிஞர் இதுகுறித்து கூறியதாவது: "பல ஆண்டுகளாகத் திருமண வாழ்வில் இருந்த பிறகும், சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்திருந்தாலும், சில சிக்கல்கள் அவர்களுக்கிடையே தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர் உணர்ந்துள்ளார். வலி நிறைந்த சூழ்நிலையைக் கடந்து, இவ்வாறு முடிவெடுக்க வேண்டியதாக இருந்தது. இந்த கடினமான நேரத்தில், சாய்ரா பொதுமக்களிடம் தனது தனியுரிமைக்காகவும், அவரின் நிலைமையை புரிந்து கொள்ளவும் கேட்கிறார்," எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஆமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த கடினமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்கு அனைவரும் மரியாதை செலுத்துவீர்கள் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com