கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?

முதல்வர் நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கபட்டுவருகிறது .


 
தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகிறது. இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிதிகளுக்கும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு நன்கொடை வழங்கியுள்ளன என்பது பற்றிய விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு நோய்தடுப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.



இதை ஏற்று முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் - ரூ.5 கோடி

சக்தி மசாலா நிறுவனம் - ரூ.5 கோடி

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் - ரூ.2 கோடி

சிம்சன்ஸ் நிறுவனம் - ரூ.2 கோடி

சண்முகா நிறுவனம் - ரூ.1.25 கோடி

எஸ்.ஆர்.மிஸ்ட் நிறுவனம் - ரூ.1.15 கோடி

தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் ரூ.1 கோடி

திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி

நேஷனல் - ரூ.1 கோடி

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் - ரூ.1 கோடி

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் - ரூ.1 கோடி

பஞ்சாப் அசோசியேடன் - ரூ.50 லட்சம்

ஜிஆர்டி தங்க மாளிகை - ரூ.50 லட்சம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - ரூ.50 லட்சம்

ராசி சிட்ஸ் - ரூ.50 லட்சம்

டிஎல்எஃப் ஃபவுண்டேஷன் நிறுவனம் - ரூ.50 லட்சம்

ஜிவிஜி பேப்பர் மில்ஸ் - ரூ.40 லட்சம்

Palavalva TE நிறுவனம் - ரூ.30 லட்சம்

SRI Cheran நிறுவனம் - ரூ.30 லட்சம்

VSM Weaves நிறுவனம் - ரூ.30 லட்சம்

சூப்பர் ஆட்டோ போர்க் பிரைவேட் லிமிட்டட் - ரூ.25 லட்சம்

தி கொங்கு - ரூ.25 லட்சம்

சாகோ சர்வ் - ரூ.25 லட்சம்

KKBKH - ரூ.25 லட்சம்

அக்கினி ஸ்டீல் - ரூ.25 லட்சம்

ஃகார்ப் நாமக்கல் - ரூ.25 லட்சம்

ரெனாட்டஸ் - ரூ.25 லட்சம்

Pon Pure நிறுவனம் - ரூ.25 லட்சம்

ATRIA Convergence - ரூ.25 லட்சம்

Roots Mutt - ரூ.25 லட்சம்

Roots Industries - ரூ.25 லட்சம்

ஸ்ரீ ஹரிகிருஷ்ணா பேப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் -ரூ.20 லட்சம்

DANFOSS நிறுவனம் - ரூ.15 லட்சம்

கோல்டு ஈ நிறுவனம் - ரூ.11 லட்சம்

SVS Oil Mills - ரூ.11 லட்சம்

காஞ்சி காமகோடி பீடம், மெட்ராஸ் டாக்கீஸ், ஜிவிஜி கிராவ்ட் பிரைவேட் லிமிடெட், சிதம்பரம் ஃபயர் ஒர்க்ஸ், ஜிவிஜி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிட்டெட், எஸ்விஏ சிண்டெக்ஸ், SVPB SB, KTV ஹீல், KOG KTV, Fabtech I-attn, KKSK, Hi Tech, K Ramasamy, RK Umadhevi, MK Alagiri, தமிழ் மான், ராசி அக்ரிகல்சர் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இது தவிர பொது மக்கள், இதர நிறுவனங்களிடமிருந்து மார்ச் 31ஆம் தேதி வரை கிடைத்த மொத்த தொகை 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாய் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சமயம் தமிழ் 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com