thalaiva birthday special
rajini birthday special
தலைவா என்கிற ஒற்றை வார்த்தை ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள கூடிய அந்த தரக மந்திரத்திற்கு சொந்தக்காரார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆவார். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரையும் அன்பினால் கட்டி போட வைத்துள்ள சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்த நாள் டிசம்பர் மாதம் 12 ம் தேதி. இந்த நாள் ரசிகர்களுக்கு பொங்கல் தீபாவளி பண்டிகையை விட மிகச் சிறப்பாக இந்த நாளை பண்டிகைபோல்கொண்டாடுவார்கள். ரஜினி என்றாலே ஸ்டைல்தான். அவர் எது செய்தாலும் ரசிகர்களின் பார்வையில் ஸ்டைல்ஆக மாறியது தமிழ் சினிமாவில் ரஜினிக்கு முன்பும் பின்பும் (நாயகிகளைத் தவிர்த்து) எவருடைய கண்ணையும் ரசிகர்கள் இவ்வளவு ரசித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. காந்தக் கண்கள் என்று பெண்களை வர்ணிக்கலாம். ஓர் ஆணின் கண்களுக்கு அப்படி ஒரு வசீகரம் பெரும்பாலும் சாத்தியமில்லை. ஒரு வசனம் ஆக்ரோஷமாக இருக்கலாம், ஒரு சண்டை ஆவேசமாக இருக்கலாம், ரஜினியைப் பொறுத்தவரை பார்வையும் சிரிப்புமேகூட ஆக்ரோஷமாக, ஆவேசமாக இருக்கும்.
அதனால் தான் அவரை ரசிகர்கள் அன்போடு தலைவா என்று அழைக்கின்றனர்.திரை உலகின் அடையாளமே திரைத்துறையின் அகராதியேஉங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் பல அதனைகள் செய்ய வேண்டும். பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவனாக உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுகிறேன்.
!!! நன்றி !!!
Comments (0)