Today Horoscope February 01-02-2020 - இன்றைய ராசி பலன்கள் (01 பிப்ரவரி 2020)

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது

Today Horoscope February 01-02-2020 - இன்றைய ராசி பலன்கள் (01 பிப்ரவரி 2020)
Today Horoscope February 01-02-2020

    

மேஷ ராசி

இனிய நாளாகவே இருக்கும் கணவன் மனைவியரிடையே சிறு சிறு சண்டைகள் வர வாய்ப்பு உண்டு வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

வயது முதிந்தவர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும்.மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் பண விரையம்  உண்டாகும்

ரிஷப ராசி

குடும்பத்தில் அமைதி நிலவும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம். செய்தொழிலில் வெற்றி காண்பீர்கள் பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் தள்ளி வைப்பது நல்லது.

மிதுன ராசி

மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவைகளில் நல்ல செய்திகள் கிடைக்கும்.தொழில் மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு

கடகம்

இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.குடும்பத்தில் அமைதி நிலவும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

சிம்ம ராசி

சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.உடல் நலம் நன்றாக இருந்து வரும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கன்னி ராசி

தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும் பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு கல்வியில் முன்னேற்றம் உண்டு குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பெண்களுக்கு நல்லதொரு நாளாக அமையும்.

துலாம் ராசி

வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை

விருச்சக ராசி

வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும் எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும் தனவரவு உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு ராசி

இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.வீடு கட்டுவது வெளிநாடு செல்வது இவைகளில் வெற்றியும் காண்பீர்கள் ஒரு சிலருக்கு வலி நல்லது முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக அமையும்.உடல்நலன் நன்றாக இருந்து வரும் வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு ல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும்.

கும்ப ராசி

சமமான நாளாக செல்லும் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும் கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள்.மாணவர்களுக்கு கல்வியில் கவனம் விநாயகப் பெருமானை வழிபடவும்.

மீன ராசி

உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும்

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com