Adi Poonguyile songs lyrics from Aranmanai Kili tamil movie

Adi Poonguyile songs lyrics from Aranmanai Kili and all songs lyrics from Aranmanai Kili, அடி பூங்குயிலே பாடல் வரிகள்

Adi Poonguyile songs lyrics from Aranmanai Kili tamil movie

அடி பூங்குயிலே பாடல் வரிகள்

 

Movie Aranmanai Kili (1993) (அரண்மனைக் கிளி) Movie Name (in Tamil) (அரண்மனைக் கிளி)
Year 1993 Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers Mano, Vaali

 

ஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

***

ஆண் : ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா

பெண் : மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா

ஆண் : சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வச்சதென்ன
என்னென்னவோ இஷ்டமா

பெண் : கூவாம கூவுறியே கூ-கூ கூ-கூ பாட்டு
மாத்தாம மாத்திபுட்ட சொக்கு போடி போட்டு

ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

***

பெண் : ஊரைஎல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே

ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

பெண் : வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

ஆண் : பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு

பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com